Posts

Showing posts from July, 2020

கொரோனா தடுப்பூசி - COVAXIN

Image
கொ ரோனா வைரஸ், மக்கள் தொகையில் உலகின் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் வுஹான் பகுதியில் தொடங்கி, உலகம் முழுவதும் பரவி 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கியிருக்கும் நிலையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த வைரஸை ஒழிக்க ஒவ்வொரு நாளும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் பலனாக பாரத் பயோ டெக் நிறுவனம்  கோவாக்சின்  எனும் தடுப்பு மருந்தை தற்போது கண்டுபிடித்திருக்கிறது. பாரத் பயோ டெக் நிறுவனத்துடன் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் எனும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தற்போது முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து, அடுத்த கட்டமாக மனிதர்களிடையே பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின்  எனும் இந்த மருந்தை தயாரித்துள்ள பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். கிருஷ்ணா ஹெல்லா தமிழகத்தின் திருத்தணியைச் சேர்ந்த ஒரு விவசாயின் மகன் என்பதும், ஆரம்ப நாட்களில் ‘பேயர்’ ரசாயன கம்பெனியில் விவசாய பிரிவில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர், தனது அமெரிக்க

PAN Card என்றால் என்ன?

Image
பான் என்றால் என்ன? Permanent Account Number என்பதன் சுருக்கமே PAN ஆகும். தமிழில் இதன் பெயர் "நிரந்தர கணக்கு அட்டை". இக் கார்டினை வழங்குவது, இந்திய மத்திய அரசின் வருமான வரித்துறை (Income Tax Department) ஆகும். பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும், அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் பார்போம். பான் கார்டில் ஒரு 10 இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுவே, பான் எண் (PAN Number) ஆகும். இந்த 10 இலக்க எண்களில் ஆங்கில எழுத்துக்களும் மற்றும் எண்களும் கலந்து இருக்கும். இந்த பான் எண்கள், ஒரு கார்டில் பதிவு செய்யப்பட்டு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பான் கார்டு என்கிறோம். பான் கார்டு என்பது வரி கட்டும் காரணத்திற்காக மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. பான்எண்கள் வருமான வரிக்காக தேவைபடுகிறது, ஆனால் அதற்கும் பான் கார்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பான் கார்டின் நகல் பல வணிக பரிமாற்றங்களுக்கு அடையாளத்தை நிரூபிக்க பயன்படுகிறது. உதாரணத்திற்கு புது வங்கி கணக்கு திறக்க, ஒரு சொத்தை அல்லது வண்டியை வாங்கவோ விற்கவோ, வ

அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம்

Image
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 17 நல வாரியங்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம் தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம். தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம் தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு ஓவியர் நல வாரியம் தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம் தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம

Earn money using cryptocurrency

Image
What is Ethereum?  Ethеrеum  is аn ореn ѕоftwаrе рlаtfоrm bаѕеd on blосkсhаіn tесhnоlоgу thаt еnаblеѕ dеvеlореrѕ tо buіld аnd dерlоу dесеntrаlіzеd applications. To give a comparison to Bitcoin, both Bіtсоіn and Ethеrеum are dіѕtrіbutеd рublіс blockchain nеtwоrks. But whilst Bitcoin primarily focuses on a рееr tо рееr electronic cash system, Ethereum fосuѕеѕ оn running the рrоgrаmmіng code of any decentralized аррlісаtіоn. With Ethereum, іnѕtеаd оf mіnіng for bіtсоіn, mіnеrѕ wоrk for the Ethеr token, which fuels thе network. This is a сrурtосurrеnсу, which іѕ аlѕо uѕеd tо рау fоr trаnѕасtіоn fееѕ аnd ѕеrvісеѕ оn thе Ethereum nеtwоrk. There іѕ a second tуре оf Ether token thаt is used to рау miners fees fоr іnсludіng trаnѕасtіоnѕ іn thеіr block, which is called gаѕ. This relates to the funding and powering of other capabilities of the Ethereum blockchain. For instance, every ѕmаrt contract execution, rеԛuіrеѕ a certain amount оf gаѕ tо bе sent along with іt, tо еntісе miners

ஆரணி வரலாறு

Image
ஆரணி நகரம் தென்னிந்தியாவின் மிக பழமையான நகரங்களில் முக்கிய நகராக விளங்கியது. ஆரணி நகரம் பற்றிய சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக  காஞ்சிபுரம்  விளங்கியது. கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன்  சென்னை ,  வேலூர் ,  திருவண்ணாமலை  மற்றும்  திருவள்ளூர்  ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக  காஞ்சிபுரம்  விளங்கிய காலத்தில் ஆரணி ஒரு முக்கிய வணிகத் தலமாக விளங்கியது. பல்லவர்களை தொடர்ந்து ராஷ்ரகூடர்கள் ஆட்சியை தொடர்ந்து சோழர்களின் பிடியில் சிக்கியது. சோழர்கள் ஆரணியை 300 வருடங்கள் ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களின் வாரிசுகளான விக்கிரம சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகிய சோழ அரசர்கள் இந்த நகரத்தை ஆண்டனர். சோழர்களை தொடர்ந்து விஜயநகர பேரரசின்  வேலூர்  சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது. ஆரணி மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செ

கொரொணா வைரஸ்- ஒரு பார்வை

Image
உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். இது சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. புதிய உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்று சீனா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லது தானே. ​எப்படி பரவும்? மனிதர்களுக்குத் தொற்றக்கூடிய கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுகின்ற தொற்று நோயாகவே இருக்கிறது. அது எப்படியெல்லாம் பரவும் என்று பார்க்கலாம். இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடமி இருந்து மற்றவருக்குப் பரவும். நோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும். வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும். கண், வாய், மூக்கு