கொரோனா தடுப்பூசி - COVAXIN

கொ ரோனா வைரஸ், மக்கள் தொகையில் உலகின் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் வுஹான் பகுதியில் தொடங்கி, உலகம் முழுவதும் பரவி 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கியிருக்கும் நிலையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த வைரஸை ஒழிக்க ஒவ்வொரு நாளும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் பலனாக பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்தை தற்போது கண்டுபிடித்திருக்கிறது. பாரத் பயோ டெக் நிறுவனத்துடன் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் எனும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தற்போது முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து, அடுத்த கட்டமாக மனிதர்களிடையே பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் எனும் இந்த மருந்தை தயாரித்துள்ள பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். கிருஷ்ணா ஹெல்லா தமிழகத்தின் திருத்தணியைச் சேர்ந்த ஒரு விவசாயின் மகன் என்பதும், ஆரம்ப நாட்களில் ‘பேயர்’ ரசாயன கம்பெனியில் விவசாய பிரிவில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர், தனது அமெரிக்க